வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்! August 10, 2017

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்!



நெடுந்தீவு அருகே, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, 2 படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது, தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது.

மீனவர்களின் ஒரு படகினையும் இலங்கைக் கடற்படையினர் கடலில் மூழ்கடித்ததாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்த மீனவர்களை, காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று, விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 57 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்த நிலையில், இன்று மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் நிலை குலைந்து போன மீனவர்கள் சேதமடைந்த படகுகளுடன் கரைதிரும்பி வருகின்றனர்.