குடியரசுத் துணைத் தலைவர் பதவியின் சிறப்பம்சங்கள் மற்றும் அவருக்குள்ள அதிகாரங்கள் என்னவென்று பார்ப்போம்.
- நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சாசன பதவி குடியரசுத் துணைத் தலைவர் பதவியாகும்.
- குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவை தலைவராகவும் செயல்படுவார்.
- உடல் நலக்குறைவு உள்ளிட்ட விஷயங்களால் குடியரசுத் தலைவரால் தனது பணியை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்போது அவரது பணிகளை மேற்கொள்ள குடியரசுத் துணைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
- குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள போது புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்கும்வரை குடியரசுத் துணை தலைவரே குடியரசுத் தலைவராக செயல்படுவார்.
- குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். குடியரசுத் தலைவர் நினைத்தால் துணைத் தலைவரை 5 ஆண்டுகளுக்கு முன்பே பதவி நீக்கம் செய்யலாம்.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியும் குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யலாம்.
- குடியரசுத் தலைவர் தங்குவதற்கென்று ராஷ்ட்ரபதி பவன் இருப்பது போல் குடியரசுத் துணைத் தலைவருக்கென்று தனியாக சிறப்பு மாளிகை கிடையாது.
- குடியரசுத் துணை தலைவரின் தற்போதைய மாத ஊதியம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது..