செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

காபில் கான் பணிநீக்கம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்! August 14, 2017

காபில் கான்  பணிநீக்கம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துமனையில் அடுத்தடுத்து 70 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக காபில் கான் என்ற மருத்துவரை பணிநீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இவர் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது அண்மையில் தெரிய வந்தது.

மருத்துவமனையில் ஆக்ஜிஸன் சப்ளை தீர்ந்தவுடன் மருத்துவர் காபீல்கான், காரில் சென்று தனது நண்பர் மருத்துவமனையில்இருந்து 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கடனாகப் பெற்று வந்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும், தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து ஊழியர்களிடம் சிலிண்டர்களை வாங்கி வரச் செய்துள்ளார்.

அவர் பணிநீக்கம் செய்யப்பட்டது பாரபட்சமானது எனக் கூறி அலிகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவரை பணிக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: