நாட்டின் 71வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீவிரவாதிகள் அசம்பாவிதங்கள் நிகழ்த்துவதை தடுக்க நாடெங்கிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்பு படையினர் என 47 ஆயிரம் வீரர்கள் டெல்லியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி இன்று காலை கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ள செங்கோட்டை பகுதியில் மட்டும் 9 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தி சுதந்திர தினத்தை சீர்குலைக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதால் இந்த முன்எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார். இதையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக–கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளும், கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக-ஆந்திரா எல்லை பகுதிகளில் காட்பாடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காட்பாடி இரயில் நிலையத்திலும் பலத்த சோதனைக்கு பின்னர் பயணிகள் உள்ளே அனுப்பப்ட்டனர்.
சுதந்திரதின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணையில் வெடிகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டது.
தேனி வெடிகுண்டு தடுப்புபிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர் தமிழரசன் தலைமையிலான குழுவினர் நவீன கருவிகளுடன் அணையின் மதகுப்பகுதி, ஆற்றுபாலம், நீர்மின்நிலையம், பூங்கா உள்ளிட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் பலபடுத்தப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் போலீசாருடன் ஊர்க்காவல் படையினரும், NCC மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி காமிரா மூலமும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.