செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

“ஆர்.எஸ்.எஸ்.தலைவரை தேசிய கொடியேற்ற அனுமதித்தது ஏன்?” August 15, 2017




கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கர்ணகியம்மன் பள்ளியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொடி ஏற்றியது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி அந்த பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். 

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டிருந்தது. இதையறிந்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரி குட்டி, ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் பள்ளியின் தேசியக்கொடியை ஏற்றுவது முறையல்ல எனக்கூறி, மோகன் பகவத் தேசியக்கொடியை ஏற்றக்கூடாது என நேற்று இரவே பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கான ஆணை இன்று காலை 9 மணிக்கு முன்பாகவே பள்ளீ ந்ரிவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பே திட்டமிட்டப்படி இன்று காலை அப்பளிக்கு வந்த மோகன் பகவத் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொடி ஏற்றியது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி அந்த பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் பள்ளியின் தலைமை ஆசியர் மீது வழக்கு பதிவு செய்யும்படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில கலாச்சாரத்துறை ஏ.கே. பாலன், “ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியை அவமதித்துவிட்டார். அரசு உதவிபெறும் அப்பள்ளியில் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர், தேசிய கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், திட்டமிட்டபடி அவர் கொடியை ஏற்றியிருப்பது, அரசின் சட்டதிட்டங்களை அவர்கள் எந்த அளவிக்கு மதிக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Posts: