குவாம் தீவின் வானொலி நிலையங்கள் தற்செயலாக ‘அவசர எச்சரிக்கை’ விடுத்ததையடுத்து அந்நாடு மக்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வடகொரிய ராணுவம் தொடர்ந்து அணுஆயுத ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாகவும் அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை தங்களுக்கு இருப்பதாகவும் அண்மையில் வடகொரியா அறிவித்தது.
அமெரிக்கா இதற்கு கடும் கண்டனத்தையும், ஐ.நாவில் பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது .இந்நிலையில் வடகொரியா, அமெரிக்க பசிபிக் கடலை ஒட்டியுள்ள அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி முகாம் உள்ள குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இருப்பதாக வடகொரியா தெரிவித்து.இதற்கான விரிவான வரைபடங்களும், விளக்கங்களும் வடகொரியா தெலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய வடகொரியா ஏவுகணைத் தளபதி, “குவாம் தீவை தாக்க ஒரே நேரத்தில் நான்கு ஏவுகணைகள் ஏவப்படும். இந்த ஏவுகணைகள் அனைத்தும் ஜப்பானின் ஷிமானோ, ஷிரோஷிமா பகுதிகளின் வான் எல்லைக்கு மேல் பறந்து சென்று குவான் தீவைத் தாக்கும்” என்றுதெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குவாம் தீவில் உள்ள மக்கள் இந்த தகவல் வெளியானதில் இருந்து பெரிதும் அச்சத்துடன் இருந்துவருகின்றனர். சாலைகளில் வழக்கமான பரபரப்பு இல்லை. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கடற்கரைகள் கூட்டமின்றி காணப்படுகின்றன. இவ்வொரு நாளும் பதற்றத்துடனே தங்களின் இயல்பு வாழ்க்கையை எதிர்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், குவாம் தீவின் வானொலிகள் திடீரென அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையில், இன்னும் சில மணிகளில் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் நிகழவுள்ளதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குவாம் தீவின் மக்கள் பெரும் பீதியடைந்தனர். விடிந்தால் உயிரோடு இருப்போமோ, இல்லையோ என்ற அச்சத்துடனே இரவை கழித்துள்ளனர். பிறகு குவாம் அரசு தரப்பில் அந்த அவசர எச்சரிக்கை தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

குவாம் தீவில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள் .சுற்றுலாவை மையமாக வைத்து தான் குவாம் தீவின் பொருளாதாரம் அமைந்துள்ளது .குவாம் தீவு தன்னாட்சி பிரதேசமாக இருந்தாலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அமெரிக்காவின் கடற்படை மற்றும் வான்படையின் பயிற்சி முகாம் குவாம் கடற்கரையில் அமைந்துள்ளது . இதனை குறிவைத்து தான் தாக்குதல் நடத்த இருப்பதாக வடகொரியா அறிவித்திருந்தது.