திங்கள், 21 ஆகஸ்ட், 2017

ஒற்றை ட்வீட்டால் அமேசானின் மதிப்பை சரித்த ட்ரம்ப்! August 16, 2017

ஒற்றை ட்வீட்டால் அமேசானின் மதிப்பை சரித்த ட்ரம்ப்!


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒற்றை ட்வீட் இ-மார்கெட்டின் ஜாம்பவானான அமேசானின் வருவாயில் 5.7 பில்லியன் டாலரை குறைத்திருக்கிறது.

இ-மார்க்கெட்டிங்கில் உலகை தன் பிடியில் வைத்திருக்கும் நிறுவனம் அமேசான். 23 முன்பு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1994ல் தன் கடையை விரித்த அமேசான் தற்போதைய நிலையில் இணைய சந்தையில் யாரும் எட்ட முடியாத இடத்தில் உள்ளது. இதன் மொத்த சொத்து மதிப்பு 83.402 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று தனது பக்கத்தில் “அமேசான் நிறுவனம் வரி செலுத்தும் சிறுவியாபாரிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்கள், பெருநகரங்கள் மட்டும் மாவட்டங்கள் தொடர்ந்து இழப்பை சந்திப்பதோடு பலருக்கு வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது” என்று ட்வீட் செய்தார்.



அவர் ட்வீட் செய்தது அமேசானின் வியாபாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ட்வீட் செய்த இரண்டு மணிநேரத்திற்குள்ளாக அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.2 சதவீதம் இறங்கியுள்ளது. அதாவது அதன் சொத்து மதிப்பில் 5.7 பில்லியன் டாலர்கள் ஆகும். டொனால் ட்ரம்ப்பின் ட்வீட்டால் அமேசானின் சந்தை மதிப்பு குறைந்ததால் அதிர்ச்சியில் இருக்கிறது அமேசான் நிறுவனம்.

டொனால் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அமேசான் மட்டுமல்லாது டொயோட்டா, போயிங், மற்றும் லாகிட் மார்ட்டின் போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பையும் குறைத்திருக்கிறார்.



டொயோட்டா நிறுவனத்தை பற்றி ட்வீட் செய்த போது அந்நிறுவனம் 1.2 பில்லியன் அளவிற்கு இழப்பை சந்தித்தது. 

போயிங் நிறுவனத்தைப் பற்றி ட்வீட் செய்தபோது 1 பில்லியன் மற்றும் லாகிட் மார்டின் பற்றி ட்வீட் செய்தபோது 3.5 பில்லியன் டாலர் வருவாய் இழப்பையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்பின் பெருநிறுவனங்களின் மீதான இந்த தொடர் தாக்குதல்களால் கலங்கி போய் இருக்கின்றன அமெரிக்க நிறுவனங்கள்.