செவ்வாய், 19 செப்டம்பர், 2017

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி! September 18, 2017

 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி!


மருத்துவ மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டால், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை எனக் கூறி, நாகர்கோவில் மாணவி திருமால்மகள் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

69 சதவீத இடஒதுக்கீட்டால் ஆண்டுதோறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தனக்கு மருத்துவ படிப்பில் சேர அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரியும் மனுவில் அவர் வலியுறுத்தி இருந்தார். 

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, மருத்துவக் கலந்தாய்வு முடிந்து விட்டதாகவும், காலம் தாழ்த்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.