வெள்ளி, 1 டிசம்பர், 2017

ரயில் கொள்ளை பற்றி துப்புக் கொடுத்தால் 2லட்சம் வெகுமதி December 1, 2017

Image

கடந்த ஆண்டு விரைவு ரயிலில் மேற்கூரைகள் உடைக்கப்பட்டு 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்குச் சென்ற விரைவு ரயிலின் மேற்கூரையை உடைத்து உள்ளே இருந்த 5 கோடியே 78 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை, சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

எனிவும், இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்குவதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஈரோடு நகர் முழுவதும் மக்கள் பார்வைக்காக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

Related Posts: