ஞாயிறு, 10 டிசம்பர், 2017

​அடேங்கப்பா... குஜராத் தேர்தலில் 397 கோடீஸ்வர வேட்பாளர்கள்! December 9, 2017

Image

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 397 கோடீஸ்வரரர்கள் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில், Association for Democratic Reforms, Gujarat Election Watch ஆகிய அமைப்புகள் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

முதற்கட்டத் தேர்தலில் 198 கோடீஸ்வரர்களும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 199 கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர். இதில், பாஜக 142 கோடீஸ்வரர்களுக்கும், காங்கிரஸ் 127 கோடீஸ்வரர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. 56 கோடீஸ்வரர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.