ஞாயிறு, 10 டிசம்பர், 2017

இந்து அமைப்பின் பிரமுகரைக் கண்டித்து மறியல்; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது December 10, 2017

Image

திருமாவளவன் தலைக்கு விலை வைத்த இந்து அமைப்பின்  பிரமுகரைக் கண்டித்து, சென்னையில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த திருமாவளவன் தலையை துண்டாக்கினால், ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்படும் என, திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் கோபிநாத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 

இதனிடையே, திருமாவளவன் தலைக்கு விலை வைத்த கோபிநாத்தை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.  விசாரணைக்குப் பின், திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபிநாத்  சிறையில் அடைக்கப்பட்டார்.