பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி வரை மத்திய அரசின் எந்தத் துறையிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என இன்றைய “இந்து ஆங்கில” நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலின் வாயிலாக இது தெரியவந்துள்ளதாகவும், இதன்மூலம் இடஒதுக்கீடு முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது
கண்டனத்துக்குரியது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து மத்திய பாஜக அரசு உடனே வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த ஏதுவாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, அதற்கு நாடாளுமன்றத்தின் மூலம் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முன் வர வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.