ஓகி புயலில் சிக்கிய புதுச்சேரி மீனவர்கள், 8 நாட்களாக கடல் நீரை குடித்து உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர். புதுச்சேரி நரம்பை பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள், புதுச்சேரியில் இருந்து கேரளாவிற்கு கடந்த 12-ம் தேதி மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 18-ம் தேதி ஓகி புயலில் சிக்கிய அவர்கள் லட்சத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்களின் உதவியுடன், புதுச்சேரி வந்தடைந்த அவர்கள், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நியூஸ் 7 தமிழிடம் பேசிய, உயிர் பிழைத்த மீனவர் ஆறுமுகம், இது போன்ற புயலை தமது வாழ்நாளில் மீன் பிடிக்க சென்றபோது பார்த்ததில்லை என தெரிவித்தார்.
புயலில் சிக்கிக்கொண்டபோது கடல் நீரை குடித்து 8 நாட்கள் வாழ்ந்ததாக குறிப்பிட்ட அவர், புதுச்சேரி அரசு உரிய நிவாரணம் அளித்தால் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனவும் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.