சனி, 16 டிசம்பர், 2017

தென்னை நாற்றுகள் பற்றாக்குறை போக்க புதிய கண்டுபிடிப்பு! December 15, 2017

Image


தென்னை நாற்றுகள் பற்றாக்குறையை தீர்க்க வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் திசு வளர்ப்பு முறையை கையாண்டுள்ளனர். இது குறித்து தற்போது பார்ப்போம்.

இந்தியாவில் அதிகளவு தென்னை உற்பத்தியாகும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தென்னை விவசாயத்தை அதிகரிக்க வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே உள்ளன. 

தென்னை விவசாயத்தில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக வயதான தென்னை மரங்களால் தென்னை மகசூல் குறைவது இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக புதிய தென்னை கன்றுகளை வாங்கி நடலாம் என்றபோதிலும் போதிய தென்னை நாற்றுகள் கிடைப்பதில்லை என்பது பொதுவான புகாராக உள்ளது.

தென்னை நாற்றுகள் பற்றாகுறையை தீர்க்க தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் திசு வளர்ப்பு முறையின் மூலம் இதற்கு தீர்வு கண்டுள்ளனர். 

ஒரு தென்னை கருவில் இருந்து ஒரு தென்னை நாற்று வருவதே பற்றாக்குறைக்கு காரணம். இதை ஈடு செய்ய ஒரு தென்னை கருவில் இருந்து 4 தென்னை நாற்றுகள் வரும் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். மேலும் ஒரு கருவில் 
இருந்து 8 நாற்றுகள் பெறுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

ஓராண்டிற்குள் விவசாயிகளுக்காக திசு வளர்ப்பு மூலம்  தென்னை நாற்றுகள் உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் விரைவில் தென்னை நாற்றுகள் பற்றாக்குறை போக்கப்படும் என்றும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.