சனி, 16 டிசம்பர், 2017

புதிய தலைநகரம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஆந்திர அரசு! December 16, 2017

Image

புதிய தலைநகரம் அமைப்பது தொடர்பாக, ஆந்திர அரசு பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த நிலையில், ஐதராபாத் அதன் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அமராவதி பகுதியில் புதிய தலைநகரம் அமைக்க, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக லண்டனை சேர்ந்த புகழ்பெற்ற நார்மன் போர்ஸ்டர் நிறுவனத்தின் சார்பில் தலைநகர் மற்றும் தலைமை செயலகம், உயர்நீதிமன்ற கட்டிடத்திற்கான வடிவமைப்பு தயார் செய்யப்பட்டது.

இதனிடையே, பாகுபலி திரைப்பட இயக்குனர் ராஜமௌலியின் ஆலோசனையின்படி, குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் உள்ள தற்காலிக தலைமை செயலகத்தில் 13-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் நார்மன் போர்ஸ்டர் பிரதிநிதிகள் இறுதியாக வடிவமைத்து தயார் செய்த, தலைநகரம் மற்றும் தலைமை செயலக கட்டிட மாதிரிகளை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் காண்பித்து விளக்கினர். 

இதில் திரைப்பட இயக்குனர் ராஜமௌலி, நகராட்சித்துறை அமைச்சர் நாராயணா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு இரண்டு மாதிரிகளையும் சி.ஆர்.டி.ஏ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.