சனி, 2 டிசம்பர், 2017

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு! December 2, 2017

Image

நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். 

அம்பரப்பர் மலைப் பகுதியில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்காக, 110 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மெகா மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குமாறு, தமிழக அரசுக்கு மத்திய அரசின் கேபினட் செயலாளர் சின்கா கடிதம் எழுதியுள்ளார். நியூட்ரினோ திட்டத்தை, தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டால், தங்களது வாழ்வாதாரம் அழிந்துவிடும் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.