சனி, 2 டிசம்பர், 2017

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் December 2, 2017

Image

தெற்கு அந்தமான் பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு அந்தமான் பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவித்தார். 

இது வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என குறிப்பிட்ட அவர், புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது என்றார். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் 23 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.