வியாழன், 1 மார்ச், 2018

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: மெகுல் சோக்ஸியின் ரூ.1,217 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! March 1, 2018

Image

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்ஸியின் 1,217.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி வைத்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 12,703 கோடி ரூபாய் கடன்பெற்று வெளிநாட்டில் பதுங்கியுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் மாமாவும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவருமான மெகுல் சோக்ஸியின் 1,217.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி வைத்துள்ளனர்.

இதில் மும்பையில் உள்ள 15 அடுக்குமாடி குடியிருப்புகள், 17 அலுவலக வளாகங்கள், ஆந்திராவில் ஒரு அசையா சொத்து, கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகம், மகராஷ்டிராவின் அலிபாக் நகரில் உள்ள பண்ணை வீடு மற்றும் தமிழ்நாடு, மகராஷ்டிரா மாநிலங்களில் 231 ஏக்கர் காலி மணைகளும் அடங்கும்.

மெகுல் சோக்ஸி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, 6,100 கோடி ரூபாய் அளவிற்கு மெகுல் சோக்ஸிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிச்சத்திற்கு வரும் முன்னதாகவே மெகுல் சோக்ஸி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.