புதன், 7 மார்ச், 2018

​சென்னையில் 3வது நாளாக நீடிக்கும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்! March 7, 2018

Image

வேலை வாய்ப்பை முறையாக ஏற்படுத்தித்தர வலியுறுத்தி, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் இன்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சைதாப்பேட்டை அருகே ஜோன்ஸ் ரோடு சிக்னல் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பார்வை குறைபாடுள்ள மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர். 

வேலைவாய்ப்பை முறையாக அரசு ஏற்படுத்தி தர வேண்டும், முதல்வர் இதுக்குறித்து தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அப்போது அவர்கள் வலியுறுத்தினர். 

இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ 
மைதானத்தில் தங்க வைத்தனர். பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் இந்த மறியல் போராட்டத்தால், அண்ணா சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: