புதன், 7 மார்ச், 2018

என்னை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது கருப்பு புடவை தான் : கி.வீரலட்சுமி March 7, 2018

Image

இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது நாளை தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடபெற்றுவருவதோடு, பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் கி.வீரலட்சுமி ஹெச்.ராஜாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் 18 வயது தொடங்கி தற்போது வரை பொது வாழ்வில் பயணிக்கும் பொழுது தினந்தோறும் தொடர்ந்து தான் அணிந்து வந்த கருப்பு புடவை தான் பாலியல் துன்புறுத்துதல் மற்றும் அச்சுறுத்துதலில் இருந்து தன்னை பாதுகாத்து கவுரவத்தை கொடுத்தது ஐயா பெரியார் தந்த கருப்பு புடவை தான் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த நன்றி கடனுக்காக பெரியாரின் சிலையை இடிக்க நினைக்கும் நபரின் கரங்களை வெட்டும் முதல் ஆள் நானாக இருந்தாலும் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts: