சனி, 3 மார்ச், 2018

அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை March 3, 2018

Image

சென்னையில், ஐ.நா., அலுவலகம் எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவியை கொடூரமாக தாக்கியும், கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

அடையாறில் ஐ.நா., யூனிசெஃப் அலுவலகம் எதிரே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வங்கி மேலாளர் ஒருவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவருடைய மகள் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த வடமாநில இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கி பாலியல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பிளேடால் மாணவியின் கழுத்தை அறுத்தும் கொலை செய்ய முயன்றுள்ளார். மாணவி அலறல் சத்தம் எழுப்பியும் அருகில் இருந்தவர்கள் உதவிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

வெளியில் சென்றிருந்த மாணவியின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

வீட்டுக்குள் பதுங்கியிருந்த வடமாநில இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தும் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பீகாரைச் சேர்ந்த நிர்பவ்குமார் என தெரிய வந்துள்ளது. ஐ.நா., அலுவலகம் எதிரே நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Posts: