தமிழகத்தில் முதன்முறையாக பாதுகாப்புத்துறை சார்பில் 800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடங்கியது.
மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் DEFEXPO என்ற பெயரில் தொடங்கிய இக்கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிட உள்ளார்.
கண்காட்சியில், 539 இந்திய நிறுவனங்கள், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 701 பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், முதன்முறையாக இந்திய விமானப் படை, கப்பல் படை, ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.
குறிப்பாக தேஜஸ் மற்றும் டார்னியர் விமானங்கள், அர்ஜூன் மார்க்-2 பீரங்கி ஆகியவை சாகசம் செய்ய காத்திருக்கின்றன.
14-ம் தேதி கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், சென்னை துறைமுகத்தில் 13, 15 ஆகிய தேதிகளில் கடற்படை போர்க் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.