பாஜகவுக்கு எதிரான சூழல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, சில ஊடகங்கள் உண்மையை மறைத்து செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டினார். அத்தகைய ஊடகங்கள், பகுஜன் சமாஜ் கட்சி குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் விமர்சித்தார். உத்தரப்பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி, அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக மாயாவதி குறிப்பிட்டார்.
இதன்மூலம், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்க வர முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பாஜகவுக்கு எதிரான சூழல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாகவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.