தைரியம் இருந்தால் பிரதமர் மோடியை தமிழகத்தில் சாலை வழியில் பயணம் செய்ய சொல்லுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சவால் விடுத்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக கடந்த மார்ச் 31ம் தேதி மதுரையில் இருந்து கம்பம் வரை 10 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டார் வைகோ.
பயணத்தை முடித்துக்கொண்டு வைகோ இன்று காலை சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பது மோடியின் திட்டம் என்றும், அதனை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அமல்படுத்திவிட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.
ஐபிஎல் கிரிக்கெட் குறித்து பேசிய வைகோ, தமிழகமே கொந்தளிக்கும் சூழலில் இந்த விளையாட்டை இங்கு நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, தையரியம் இருந்தால் சாலை வழியாக செல்லட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/4/2018/vaiko-slams-modis-visit-tn