நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும், அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளால் நாட்டில் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஜய் மக்கான், அர்விந்தர் சிங் லவ்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் மத்திய அரசை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.