புதன், 27 பிப்ரவரி, 2019

இந்தியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை! February 27, 2019

Image
நிலத்தடி நீரின் வீழ்ச்சி அதிகரித்து கொண்டிருப்பதால் இந்தியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கணக்கிட்ட அளவை விட 70% வேகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக தெரிய வந்துள்ளது. 
``டெல்லி, ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 32 கன கிமீ நிலத்தடி நீரானது ஒவ்வொரு வருடமும் எடுக்கப்படுவதாகவும், இவ்வாறு எடுக்கப்படும் நிலத்தடி நீரில் பாதியாவது பருவமழைகளின் மூலம் திரும்பக் கிடைத்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய நிலத்தடி நீர் வீழ்ச்சி வட இந்தியாவில்தான் நிகழ்ந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், வேகமாக வளர்ந்து வரும் இந்தப் பிரச்னையின் மையப்புள்ளியாக தலைநகர் டெல்லி உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கங்கைக் போன்ற ஆறுகளின் கரையோரத்தில் நிலத்தடி நீரை தொடர்ந்து நீரை உறிஞ்சி கொண்டிருப்பதால் வறட்சி நெருங்கி கொண்டிருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே பூமி வறண்டு விடுவதன் மூலம் மிதமான பூகம்பங்களைத் தூண்டுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
நீர் தர குறியீட்டில் இடம் பெற்றுள்ள 122 நாடுகளில் இந்தியா 120வது இடத்தில் உள்ளதாக  நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது நினைவு கூரப்பட வேண்டியுள்ளது. 

source: ns7.tv