வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

2019ல் என்னென்ன அறிமுகப்படுத்தப்போகிறது கூகிள்? February 14, 2019

source ns7.tv
Image
இந்த ஆண்டு கூகிள் நிறுவனம் வெளியிடவுள்ள தயாரிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை பிரம்மாண்டமாக வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு புதிதாக என்ன வர இருக்கிறது என்று ஆப்பிள் பயனாளர்கள் ஆர்வமுடன் கவனிப்பது வழக்கம். ஆப்பிளுக்கு நிகரான போட்டியாளரான கூகிளும் ஒவ்வோர் ஆண்டும் தனது புதிய தயாரிப்புகளையும், எதிர்கால திட்டங்களையும் வெளியிடும்.
இவ்வகையில், இந்த ஆண்டு கூகிள் வெளியிட இருக்கும் தயாரிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 9to5googleன் தகவல் படி இந்த ஆண்டு Google smartwatch, new Nest Cam, updated Google Home, பெருமளவு விலை குறைக்கப்பட்ட Pixel 3 Lite smartphone  ஆகியவற்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதோடு Google Pixel 4ம் இந்த ஆண்டே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட iPhone XR உடன் போட்டியிடும் விதமாக Pixel 3 Lite ஸ்மார்ட் போனை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தெரிகிறது. மேலும், இதன் விலை iPhone XR ஐ விட மிக குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த போனில் Qualcomm Snapdragon 710 processor மற்றும் ஆண்ட்ராய்ட் 10ல் இயங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மிக நீண்டகால எதிர்பார்ப்பான பிக்ஸல் வாட்ச் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல வாட்ச் நிறுவனமான Fossil உடன் கடந்த மாதம் 40 மில்லியன் டாலர்களுக்கு கூகிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது. பிக்ஸ்ல் வாட்ச்சுக்கு தேவையான தொழில்நுட்பத்தை Fossil நிறுவனம் வழங்கும் என்றும், அப்படி எதிர்பார்க்கபட்டது போல பிக்ஸல் வாட்ச் வெளியானால் நிச்சயம் இது ஆப்பிள் வாட்சுக்கு போட்டியாக இருக்கும் என்று டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இவை மட்டுமல்லாமல், மேம்படுத்தப்பட்ட கூகிள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரையும் இந்த ஆண்டு வெளியிடவுள்ளதாகவும், இது மேம்படுத்தப்பட்டதாக இருக்குமா அல்லது புதிய தயாரிப்பாக இருக்குமா என்பது குறித்து அறிவிப்புக்கு பின்னர்தான் தெரியவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.