source ns7.tv
ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.
புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா எனும் பகுதியில் துணை ராணுவப் படையினரை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது எனும் தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினான். இதில், துணை ராணுவப்படையைச் சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து, தடையங்களைச் சேகரிக்கும் நோக்கில், அந்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டதை அடுத்து, அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.