
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ட இருப்புத் தொகை இல்லாத காரணத்திற்காக பிடிக்கப்பட்ட அபராத தொகை, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், திருப்பி அளிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய சிதம்பரம், கடந்த நான்கரை ஆண்டில் 45 வருடங்கள் இல்லாத அளவாக 6.1 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.
அதிமுக அரசின் ஊழல்கள் தொடர்பாக பாமா தயாரித்த 206 பக்க ஊழல் பட்டியலை இனி ஒவ்வொரு தொகுதியாக வாசிக்க இருப்பதாகவும் ப.சிதம்பரம் அப்போது தெரிவித்தார்.