அரசின் வருமானத்தில் 71 சதவீதம், அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு செலவழிக்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அது போல கடமையும், பணியும் முக்கியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரலாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு பள்ளியில் படித்தால், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது, இடமாறுதல் செய்தவர்களை பழைய இடங்களுக்கு பணிமாறுதல் கோரிய மனுவை தனியாக தாக்கல் செய்ய கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்
source ns7.tv