திங்கள், 25 பிப்ரவரி, 2019

புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்: பாகிஸ்தான் February 25, 2019

Image
புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மற்றும் அதன் தலைவர் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா கோரியது. அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் உரிய ஆதாரம் இருந்தால் இந்தியா கொடுக்க வேண்டுமென தொடர்ந்து கூறிவந்தது. 
தற்போது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், புல்வாமா தாக்குதல் குறித்து ஆணித்தரமான ஆதாரம் இருந்தால் பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source ns7.tv
http://www.ns7.tv/ta/tamil-news/world-important/25/2/2019/pakistan-said-about-pulwama-attack