புதன், 13 பிப்ரவரி, 2019

தமிழக கலாச்சாரத்தை சீர்குலைக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும்" :தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு February 12, 2019

Image
தமிழர் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 
சட்டப்பேரவையில் உறுப்பினர் தமீமுன் அன்சாரி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் செயலி ஆபாசமாக, சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதால், அதனை தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
மேலும் தொடர்ந்து புகார்கள் வருவதால், ப்ளூவேல் செயலிக்கு தடை விதித்தது போன்று, மத்திய அரசிடம் தெரிவித்து, டிக் டாக் செயலிக்கும் தடை செய்யப்படும் என்றும் அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

source: ns7.tv

Related Posts: