புதன், 13 பிப்ரவரி, 2019

50% வரை உயர்ந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணங்கள்! February 13, 2019

source ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/2/2019/madras-university-exam-fee-cost-incressed-50-percent


Image
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 
 
சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் 110 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணமாக  இளங்கலையில் ஒரு பாடத்திற்கு 60 ரூபாயும், முதுகலையில் ஒரு பாடத்திற்கு 100 ரூபாயுமாக இருந்தது. 
 
இந்நிலையில், தற்போது இக்கட்டணங்கள் இளங்கலைக்கு 30 சதவிகிதமும், முதுகலைக்கு 50 சதவிகிதமும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கு குறைந்த பட்சமாக 85 ரூபாயும், அதிகபட்சமாக 165 ரூபாயும் புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல், முதுகலை படிப்புகளை பொறுத்தவரையில், குறைந்த பட்சமாக 150 ரூபாயும், அதிகபட்சமாக 350 ரூபாயும் புதிய தேர்வுக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இப்புதிய கட்டண விகிதங்கள், நடப்பு செமஸ்டரில் இருந்து உடனடியாக அமலுக்கு 
வருவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
தேர்வு நடத்தக்கூடிய செலவினங்கள் அதிகரித்துள்ளதால், தேர்வுக்கட்டணத்தை 
உயர்த்தியுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகம் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், கடந்த 
ஓராண்டிற்கும் மேலாக தேர்வுத்தாள்களை திருத்திய பேராசிரியர்களுக்கு அதற்கான 
ஊதியம் தற்போதுவரை வழங்கப்படவில்லை என்ற புகார் ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது.