புதன், 20 பிப்ரவரி, 2019

தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் உயிரிழப்பு..! February 20, 2019

Image
தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவில் கடந்தாண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 28 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 496 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 437 நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தெலங்கானா மாநில சுகாதாரத் துறையினர் கூறும்போது, குளிர்காலம் குறையும் போது, பன்றிக் காய்ச்சலின் தாக்கமும் குறைந்துவிடும். தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலர் குணமாகி வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கை கழுவுதல், குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

source: ns7.tv