தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடல் முதல் கர்நாடக கடற்பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், ஓர் இரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 33டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source: ns7.tv