டிக்-டாக் செயலியில் தவறான கணக்குகள் முடக்கப்படும் என அந்நிறுவனமே அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆபாச செயலுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகைக்கும் வகையில் டிக் டாக் உள்ளதாகவும் அதனால் அந்த செயலியை தடை செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ப்ளூவேல் விளையாட்டை தடை செய்தது போல், டிக் டாக்-கையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
இந்நிலையில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மணிகண்டன், டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
source: ns7.tv