வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஒரே க்ளிக் 15 ஆண்டு ஜெயில்: புதிய சட்டம் நிறைவேற்றம்! February 13, 2019

source ns7.tv
Image

தீவிரவாதம் தொடர்பான கருவிகள், செயல்பாடுகள் குறித்த லிங்க்குகள் எதையாவது ஒரு முறை க்ளிக் செய்தாலே அது தண்டனைக்குறிய குற்றம் என்று ப்ரிட்டன் அரசு சட்டமியற்றியுள்ளது.
எல்லை பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் சட்டத்திற்கு Royal Assent நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே இருந்த இந்த சட்டத்தில் தீவிரவாதத்தை தீவிரமாக தடுக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கூடுதலாக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம் தொடர்புடைய லிங்க்குகளை மூன்று முறை க்ளிக் செய்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று முதலில் ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் அந்த திட்டம் கைவிடப்பட்டு ஒரு முறை க்ளிக் செய்தாலே குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் சிக்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும், அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
பிரிவு 58(1) 2000 விதிப்படி தீவிரவாதத்தில் ஈடுபடவோ அல்லது பயிற்சி பெறுவதற்காகவோ தகவல்களை திரட்டுவது அல்லது ரெக்கார்ட் செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும்.
இந்நிலையில், ஒரு இணையதளத்தை பார்க்கும் போது எந்த லிங்குகளையும் க்ளிக் செய்யாமலே தானாக ஸ்ட்ரீம் ஆகும் வீடியோக்களையோ அல்லது தகவல்களையோ கண்காணிக்க முடியாது என்று அந்த அரசு வாதிட்டுள்ளது. எனினும், இணையதளங்களில் தீவிரவாதம் தொடர்புடைய எவற்றை பார்த்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது. இந்த சட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.