இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளா காவல்துறையில் ரோபோ ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
இதனை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். திருவணந்தபுரத்தில் உள்ள கேரளா காவல்துறை தலைமை அலுவலகத்தில் KP-BOT எனப்படும் ரோபோ பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது. மேலும் காவல்துறை பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரோபோ அறிமுகப்பட்டுள்ளதாக டிஜிபி லோகநாத் பெஹ்ரா விளக்கினார்.
இந்நிலையில், நான்கு பேர் செய்யக் கூடிய வரவேற்பறை பணியை இந்த ரோபோ சமாளிக்கும். புகார்கள் அடிப்படையில் வழக்கு தொடர்பான கோப்புகளைத் தயாரித்தல், விருந்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து முடிக்கும் திறன் கொண்டது இந்த KP-BOT வகை ரோபோ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காவல் அதிகாரி போலவே இந்த ரோபோவுக்கு உடை அணிவிக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
source ns7.tv