ராணுவத்தில் சேருவதற்கு இரண்டாயிரத்து 500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பாரமுல்லா பகுதியில் 111 பணியிடங்களுக்கு இரண்டாயிரத்து 500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக ராணுவத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அப்பகுதியில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் எந்த வேலை கிடைத்தாலும் தற்போதைய சூழலில் போதும் என்ற மனநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பை தீவிர தாக்குதல் முதல் உரி தாக்குதல் வரை இந்தியா அனுப்பிய ஆதாரங்களை வைத்து பாகிஸ்தான் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புல்வாமா தாக்குதலுக்கு ராணுவம் எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது என தெரிவித்தார். பிரதமர் ஏற்கனவே கூறியதை போன்று ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
source: ns7.tv