சனி, 16 பிப்ரவரி, 2019

ஏர்டெல், ஐடியா, வோடஃபோனை கிண்டல் செய்து ஜியோ போட்ட ட்வீட்! February 15, 2019


Image
காதலர் தினத்தை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்டிஹ்ல் தொலை தொடர்பு துறையில் நுழைந்த ஜியோ நிறுவனம், 2016 செப்டம்பர் மாதத்தில் அதன் சிம்கார்டுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்தது. ஜியோ சிம்கார்டுகள் 4ஜி நெட் ஒர்க்கில் மட்டுமே இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டு சிம்கார்டுகளை கொண்ட பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் சிம்1 4ஜி நெட்வொர்க்கிற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. ஜியோ சிம்மின் வரவால், பயனாளர்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்த ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட சிம்கார்டுகளை சிம்2 விற்கு மாற்றி, சிம் 1ல் ஜியோ சிம்கார்டுகளை பயன்படுத்தத்தொடங்கினர். 
ரிலையன்ஸ் ஜியோவின் ஆஃபர்களாக இலவச டேட்டா, அன்லிமிடட் கால்கள், குறைந்த விலை ரீசார்ஜ்கள் உள்ளிட்டவற்றை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்திய போது பெரும்பாலானோர் ஜியோவிற்கு தங்களது நெட்வொர்க்குகளை மாற்றினர்.
இதை கிண்டல் செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் 
Roses are red,
Violets are blue,
Once a neighbour in SIM slot 2,
Where are you?
Happy Valentine's Day. #WithLoveFromJio என்று பதிவிட்டுள்ளது. 


ஜியோ நிறுவனம் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை இப்படி கிண்டல் செய்வது இது முதன்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு  போட்டி நிறுவனங்கள் தங்களுக்கு போதிய இடங்களை தரவில்லை என்று ட்ராயிடம் புகார்தெரிவித்த கையோடு, வோடஃபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை கிண்டல் செய்து ட்விட் செய்திருந்தது.
ஜியோ நிறுவனத்தின் சமீபத்தைய கிண்டல் ட்வீட்டுக்கு ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் என எந்த நிறுவனமும் இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த ட்விட்டுக்கு ஜியோ வை விரும்பும் பயனாளர்கள் ஆதரவாகவும், ஜியோவால் கடுப்பான பயனாளர்கள் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.
20 கோடி வாடிக்கையாளர்களை தொலைதொடர்பு துறையில் பெற்றபிறகு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வணிகர்கள் பக்கம் தன் கவனத்தை திசை திருப்ப இருப்பதாக தெரிகிறது. அந்நிறுவனம் பிஓஎஸ் (PointOfSale) எனப்படும் துறையில் அதிரடி ஆஃபர்களுடன் காலடி எடுத்துவைக்க இருக்கிறது. 3000 ரூபாய் அடிப்படை தொகை செலுத்தி இந்த பிஓஎஸ் கருவிகளை வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே PayUmoney POS, mSwipe Solution, SBI POS Terminals, HDFC merchant Services உள்ளிட்டவை பிஓஎஸ் கருவிகளை வழங்கி வரும் நிலையில் ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

source ns7.tv