தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் நடைபெற்ற முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக சார்பில் 37 எம்பிக்கள் இருந்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்றும், 5 ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் கத்தி கத்தி குரல் எழுப்பியும் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கால கூட்டணி கணக்கு என்பது வேறு கொள்கை என்பது வேறு என குறிப்பிட்டுள்ள அன்வர்ராஜா, கொள்கையில் அதிமுகவிற்கும் பாஜகவுக்கும் எந்த சமரசமும் இல்லை என்றும் கூறியுள்ளார். முத்தலாக் சட்டத்தை எத்தனை முறை அரசு கொண்டுவந்தாலும் அத்தனை முறையும் அதிமுக எதிர்க்கும் என கூறியுள்ள அவர், தேர்தல் காலத்தில் வைக்கப்படும் கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கு என்றும் தெரிவித்துள்ளார்.