வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

டப்ஸ்மேஷ் உள்ளிட்ட 16 பிரபல இணைய தள பயனாளர்களின் தகவல்கள் விற்பனைக்கு! February 13, 2019

source ns7.tv
Image
16 பிரபல இணையதளங்கள் வாயிலாக 61,70,00,000 கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி ரெஜிஸ்டர் நிறுவனத்தின் தகவல்படி 61,70,00,000 பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அவர்களது தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு, அந்த தகவல்கள் dark webல் விற்பனைக்கு வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. Dubsmash, MyFitnessPal, MyHeritage உள்ளிட்ட 16 பிரபல வெப்சைட்டை பயன்படுத்தும் பயனாளர்களின் இமெயில் முகவரி,பாஸ்வேர்ட், தனிப்பட்ட மற்றும் இருப்பிட தரவுகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த தரவுகள் அனைத்திற்கும் 20,000$ பிட்காயின் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கணக்குகள் அனைத்தும் கடந்த வருடமே ஹேக் செய்யப்பட்டு தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தி ரெஜிஸ்டர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், மைஹெரிடேஜ் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு தகவல்களை சரிபார்த்தபோது, கடந்த ஆண்டு தங்களது இணையதள தகவல்கள் திருடு போனதையும், அந்த தரவுகள் அனைத்தும் உண்மையானவை என்று அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு, 500px மற்றும் EyeEm நிறுவனங்களின் இணையதள பயனாளர்களின் தகவல்கள் தங்களது சர்வர்களில் இருந்து திருட்டு போயுள்ளதாகவும், தங்கள் பயனாளர்களிடம் பாஸ்வேர்டுகளை மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு 773 மில்லியன் பயனர்களின் இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட  தரவுகள் திருடப்பட்டிருந்தது. அந்த தரவுகள் அனைத்தையும் யார் வேண்டுமானாலும் இலவசமாகவே தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்னும் அளவிற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சந்தேகத்திற்கிடமான இமெயில் ஏதும் வந்துள்ளதா என்பதை பார்த்து அதை அப்புறபடுத்தவேண்டும் என்றும், முக்கிய இணையதளங்களின் பாஸ்வேர்ட்களை அடிக்கடி மாற்றம் செய்துகொண்டால் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை தடுக்க முடியும் என்று டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
டிக்டொக், மற்றும் மியூசிக்கலி வருகைக்கு முன்பு டப்ஸ்மேஷ் என்ற இணையதளம் மிக பிரபலமாக இருந்ததும், பல கோடி பேர் அதன் பயனாளர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.