திங்கள், 18 பிப்ரவரி, 2019

புல்வாமா தாக்குதலை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் கருத்து பதிவிட்ட காஷ்மீர் மாணவிகள்! February 18, 2019

Image
புல்வாமா தாக்குதலை புகழ்ந்து, தேசத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதாக காஷ்மீர் மாணவிகள் 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 
அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் பல்கலைக்கழகத்தில், காஷ்மீரைச் சேர்ந்த மாணவிகள் தல்வீன் மன்சூர், இக்ரா, சோரா நஷிர், உஷ்மா நஷிர் ஆகியோர் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். 
இவர்கள் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய தீவிரவாதியை புகழ்ந்து, வாட்ஸ் அப்பில் கருத்துகளை பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது, என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது. 
புல்வாமா தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், காஷ்மீர் மாணவிகள் இதுபோன்று செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
source: ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india-editors-pick/18/2/2019/4-kashmiri-students-jaipur-medical-college-suspended-booked