வறட்சி நிவாரணமாக தமிழக அரசு கேட்ட 39,565 கோடி ரூபாயில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் கடந்த 3 ஆண்டுகளில் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து வறட்சி மீட்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் ஒரு லட்சத்து 63,605 கோடி ரூபாய் கேட்டு மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
ஆனால் மத்திய அரசு சார்பில் இருந்து இந்த 14 மாநிலங்களுக்கும் சேர்த்து 23,190 கோடி ரூபாய் மட்டுமே வறட்சி நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. அதாவது மாநில அரசுகள் கேட்டுக் கொண்ட நிதியில் மத்திய அரசு வெறும் 19% மட்டுமே வழங்கி இருக்கிறது. அதிலும், தமிழக அரசு கேட்ட வறட்சி நிவாரணத் தொகையில் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு
வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலத்தின் சார்பில் வறட்சி நிதியாக 92 கோடி கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 70 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதும் வேளாண் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.