சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்றும் ஒரு கிராம் 6 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 196 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 48 ரூபாய் அதிகரித்து 25 ஆயிரத்து 568 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால், சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடு தங்கத்தின் மீது அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
source ns7.tv