சமூகநீதி பேசுகின்ற பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைகளை மறந்து, மதவாத பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பாஜக தலைமையிலான கூட்டணி என்பது தேசத்தையே விற்கக்கூடிய கூட்டணி எனவும், அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறக்கூடாது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தங்கள் பெட்டியை தினசரி நிரப்புவதையே, கொள்கையாக கொண்டு செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். ஆட்சியாளர்களின் பலவீனத்தை பயன்படுத்தி, கூட்டணியை பாஜக அமைத்துள்ளதாகவும், வரும் தேர்தலில் பாஜவை வீழ்த்தி பாடம் புகட்டுவோம், எனவும் கூறினார்.
source ns7.tv
http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu/25/2/2019/ks-alagiri-criticized-pmk