திங்கள், 25 பிப்ரவரி, 2019

வரலாற்றில் முதன்முறையாக பெண் தூதுவரை நியமித்தது சவுதி அரேபியா! February 25, 2019

Imageசவுதி இளவரசி ரீமா பிந்த்பாண்டர் அல்சவுத் (Reema bint Bandar al-Saud) அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை சவுதி அரேபியா தூதராக நியமித்துள்ளது. 
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், "சவுதி அரேபியா விஷன்-2030" என்ற பெயரில் தொலை நோக்கு திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். பெண்களுக்கு இதுவரை அளிக்கப்படாத உரிமைகளை வழங்கி வரும் அவர், இளவரசியான ரீமா பிண்ட்மாஸ்டர் அல் சவுத்தை, அமெரிக்க தூதராக நியமித்துள்ளார். 
அவரது தந்தை பாண்டர் அல் சுல்தான் சவுத் 1983ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை, அமெரிக்க தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
source ns7.tv