தமிழகத்தில் உள்ள அனைத்து உயரதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன், பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.ஜி. முருகன் மீதான விசாரணையை தொடர்ந்து நடத்த சிபிசிஐடி தலைமையகத்துக்கு உத்தரவிட்டது. 2 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய விசாகா கமிட்டிக்கு உத்தவிட்ட நீதிமன்றம், ஐ.ஜி. முருகன் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தியது.
மேலும், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்க அனைத்து உயரதிகாரிகளின் அறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
source: ns7.tv