புதன், 20 பிப்ரவரி, 2019

வானில் தெரிந்த சூப்பர் மூன்; உற்சாகமாக கண்டுரசித்த பொதுமக்கள்! February 20, 2019

Image
சூப்பர் மூன் எனப்படும் நிலவு பெரிதாக தெரியும் அரிய நிகழ்வை இந்தியாவில் ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
ஸ்னோ மூன் எனப்படும்  இந்தாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் நேற்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த சூப்பர் மூன் வரும் 2026ம் ஆண்டு தான் பார்க்க முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி, கொடைக்கானலில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் திரண்ட மக்கள், முன் அனுமதி பெற்று இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இதேபோல், உதகையில் வழக்கத்திற்கு மாறாக வானில் பெரியதாக தென்பட்ட நிலவை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வெறும் கண்களால் பார்க்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததையடுத்து இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள், புகைப்படங்களை எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் இந்த சூப்பர் மூன் எனப்படும் அரிய நிகழ்வு தென்பட்டதால், பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடற்கரையோரத்திற்கும், வானிலை ஆராய்ச்சி மையங்களுக்கும்  சென்று, நிலவை கண்டு ரசித்தனர். 

source: ns7.tv