உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கான பொதுமக்களின் நிதி உதவி குவிந்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பொருளாதாரரீதியில் உதவும் நோக்கில் நடிகர்கள், தொழிலதிபர்கள், சாதாரண மக்கள் என பலரும் பாரத் கி வீர் எனும் நிதி சேகரிப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிகளை அளித்து வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த 3 நட்களில், ஏராளமான நிதி உதவி குவிந்துள்ளதாக கிரண் ரஜிஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நட்களில், ஏராளமான நிதி உதவி குவிந்துள்ளதாக கிரண் ரஜிஜூ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை காக்கும் பொறுப்பை அரசோடு சேர்ந்து பொதுமக்களும் ஏற்றிருப்பதாக கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.